Tuesday, September 10, 2013

எங்(கே)கும் கடவுள் !!!





மைல் கல்லும் கடவுள்
பிண்ட எள்ளும் கடவுள்
நெருப்பும் கடவுள்
இருப்பும் கடவுள்
நீரும் கடவுள்
சோறும் கடவுள்
குரங்கை கண்டால் ஆஞ்சிநேயர் கடவுள்
நாயை கண்டால் பைரவர் கடவுள்
பாம்பும் பல்லியும் தேளும் கடவுள்
பறக்கும் பருந்தும் கருடக் கடவுள்
மாட்டின் சாணியில் பிள்ளையார் கடவுள்
பசுவின் மடியில் பார்வதி கடவுள்
குழந்தை பேண்டதை துடைக்கும் பேப்பரில் குடியிருக்கிறாளாம் சரஸ்வதி கடவுள்
காலரா வந்தால் அது காளிக் கடவுள்
அம்மை வந்தால் அது அம்மன் கடவுள்
மண்டியிட்டு மணலில் நடந்து வருத்திக் கொண்டால் மாதா கடவுள்
அலகு குத்தி அனலில் நடந்து பக்தி கொண்டால் முருகக் கடவுள்
பயந்ததெல்லாம் கடவுள்
பயமுறுத்தவும் கடவுள்
மூலை முடுக்கெல்லாம் மூவாயிரம் கடவுள்
மூளை உள்ளோர்க்கு ஏனடா கடவுள்...