Tuesday, September 28, 2010

நண்பேன்டா ! ! !

நம்ம நண்பர்கள் எப்பவுமே நமக்கு இடைஞ்சலையும் சந்தோசத்தையும் குடுத்தாலும் இந்த "நண்பேன்டா" அப்டிங்கற வார்த்தை எப்பவெல்லாம் நம்ம மனசு சொல்லதோணும்

சந்தோசம் : "டே மச்சான் உனக்காகத்தான் இந்த பீர உசார் பண்ணி வைச்சுருக்கேன் அவுனுக வர்றதுக்குள்ள முடிசுர்ரா"

ஆறுதல் : "விட்றா ஊர்ல இவ ஒருத்திதான் பிகரா?, உன் tallentக்கு பத்து பிகருகூட உனக்கு மாட்டும், சும்மா இதுக்கு போய் மூஞ்சிய தொங்க போட்டுக்கிட்டு"

துக்கம்:   "டே எத்னி நேரமாதன் அத்தயே நினைசுகினு துண்ணாம இருப்ப ? வுடு ஊர்ல உலகத்துல நடக்காததா? எந்திரி, எந்திரிச்சு போய் துன்னு, முதல்ல போய் மொகத்த கழ்வு,
நாங்கலாம் இருக்கோம்ல அப்புறம் என்ன, உன்னைய இப்டியே விட்ருவோமா?"

சண்டை(நமக்காக இன்னொருவருடன்)  : "மேல கைய வைச்சியாம்ல? ஆம்பளைய இருந்தா இப்ப வைச்சு பாரு, ............... சாவடிசுருவேன்"

நெஞ்சை தொடுதல் : "டே பரதேசி காசு இல்லாட்டி சொல்ல மாட்டியா? என்ட்ட கேட்டா குறைஞ்சுருவியா? நேத்து night சாப்டாமையே தூங்கிட்டியா நாயே?, இனிமே இப்டி பண்ண செருப்பு பிய்ய பிய்ய அடிப்பேன்"

ஆயிரம் பேரு நம்மள சுத்தி இருந்தாலும் பிரெண்சு பிரெண்சுதான்...

Wednesday, September 15, 2010

காதலியை எப்படி சமாதனப் படுத்துவது ?

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


                                                      


முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"





முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?











                          
                                                                                                                                                        முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
 ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல?  இரு அவன்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உண்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"


முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப் பட்டா நான் யார்ட போய் சொல்லுவேன், என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உண்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ எண்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உண்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உண்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உண்ட்வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா?  என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."



முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Tuesday, September 14, 2010

லவ் பண்றாங்களாம்

ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம், அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!!
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, முள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாள்க துரோகிகள், அவன் ஏமாத்னதும் தேம்பி தேம்பி அழுதுங்க, ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைகுராள்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுது,  உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை, ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிராள்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும், படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை, ஓகே பொண்ணுக மூக்கு சிந்தின்னாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ண முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது,  call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா -  மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக நம்ம பசங்க, பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிசாள்கன்னா non stopa half an hour பேசுவாள்க. "இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...

Monday, September 13, 2010

Intro for Ranahasuran

Hai friends,

இன்னைக்குதான் இந்த புது ப்ளோக ஆரம்பிக்கிறேன், இதுல "கதை, திரைப்பட கண்ணோட்டம், அரசியல், விளையாட்டு, கணிதவியல், அறிவியல், சமூக அறிவியல், குடிமையியல், தாவரவியல், விலங்கியல், அவியல், பொறியியல், பொறியல், புவியியல் இப்டி எல்லாமே இருக்கும்" அப்டின்னு சொல்லமாட்டேன். ஏன்னா இதுல என்ன வரபோகுதுன்னு எனக்கே தெரியாது, எது வந்தா என்ன? புடிச்சுருந்தா படிங்க, உங்களுக்கு புடிக்காட்டாலும் படிங்க, நீங்க படிச்சா மட்டும் போதும், நீங்க படிச்சா மட்டும் போதும்...
மங்கு மடார்னு, அஜால் குஜால்னு, அதிரி புதிரியா, பப்பளபளப்பானா நம்ம அதிரடி ப்ளாக் எந்திரன் பட பில்டப் மாதிரி அநியாய  பில்டப்போட களத்துல இறங்குது...

எரிச்சாலும் வருவான், புதைச்சாலும் வருவான் அவன்தான்டா நரகாசுரன்...
எரிச்சா கருகிருவான், புதைச்சா அழுகிருவான் அவன்தான்டா ரணஹாசுரன்...

ஐயாலங்கடி ஜில்லு....                           ஐயாலங்கடி ஜில்லு...

 ஐயா லங் கடி ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லு....