Tuesday, September 14, 2010

லவ் பண்றாங்களாம்

ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம், அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!!
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, முள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாள்க துரோகிகள், அவன் ஏமாத்னதும் தேம்பி தேம்பி அழுதுங்க, ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைகுராள்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுது,  உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை, ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிராள்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும், படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை, ஓகே பொண்ணுக மூக்கு சிந்தின்னாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ண முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது,  call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா -  மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக நம்ம பசங்க, பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிசாள்கன்னா non stopa half an hour பேசுவாள்க. "இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...

2 comments:

  1. நீங்க சொல்றது உன்மை தான். அதனாலெ நான் love பன்ன கூடான்ந்து சாமி மெலே சத்தியம் பன்னிட்டம்மில்ல.. லவ் பன்னம்ம இறுக்கரது எவ்வலவு இனிமை... iam a free bird

    your post is nice

    ReplyDelete
  2. விடுங்க பாஸ், இந்த பொண்ணுங்களே இப்படித்தான், நம்ம பசங்கள சொல்லனும், எத்தனை பிகர் வந்தாலும் வைச்சுகிறாங்க, இதுல எந்த பொண்னை லவ் பண்ண்றாங்கன்னு எப்படி நம்பற்து?

    ReplyDelete