Tuesday, September 28, 2010

நண்பேன்டா ! ! !

நம்ம நண்பர்கள் எப்பவுமே நமக்கு இடைஞ்சலையும் சந்தோசத்தையும் குடுத்தாலும் இந்த "நண்பேன்டா" அப்டிங்கற வார்த்தை எப்பவெல்லாம் நம்ம மனசு சொல்லதோணும்

சந்தோசம் : "டே மச்சான் உனக்காகத்தான் இந்த பீர உசார் பண்ணி வைச்சுருக்கேன் அவுனுக வர்றதுக்குள்ள முடிசுர்ரா"

ஆறுதல் : "விட்றா ஊர்ல இவ ஒருத்திதான் பிகரா?, உன் tallentக்கு பத்து பிகருகூட உனக்கு மாட்டும், சும்மா இதுக்கு போய் மூஞ்சிய தொங்க போட்டுக்கிட்டு"

துக்கம்:   "டே எத்னி நேரமாதன் அத்தயே நினைசுகினு துண்ணாம இருப்ப ? வுடு ஊர்ல உலகத்துல நடக்காததா? எந்திரி, எந்திரிச்சு போய் துன்னு, முதல்ல போய் மொகத்த கழ்வு,
நாங்கலாம் இருக்கோம்ல அப்புறம் என்ன, உன்னைய இப்டியே விட்ருவோமா?"

சண்டை(நமக்காக இன்னொருவருடன்)  : "மேல கைய வைச்சியாம்ல? ஆம்பளைய இருந்தா இப்ப வைச்சு பாரு, ............... சாவடிசுருவேன்"

நெஞ்சை தொடுதல் : "டே பரதேசி காசு இல்லாட்டி சொல்ல மாட்டியா? என்ட்ட கேட்டா குறைஞ்சுருவியா? நேத்து night சாப்டாமையே தூங்கிட்டியா நாயே?, இனிமே இப்டி பண்ண செருப்பு பிய்ய பிய்ய அடிப்பேன்"

ஆயிரம் பேரு நம்மள சுத்தி இருந்தாலும் பிரெண்சு பிரெண்சுதான்...

No comments:

Post a Comment