Tuesday, July 19, 2011

தெய்வத் திருமகள் என் பார்வையில்

தெய்வத்திருமகள்
""""""""""""""""""""""""""""""""
நடிப்பு: விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர்
இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிரவ் ஷா
இயக்கம் : விஜய்

இந்த விமர்சனத்தில் படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை...(கதையை கூறிவிட்டால் பார்க்கும்போது ஸ்வாரஸ்யம் இருக்காது) என்பார்வையில் படத்தில் எனக்கு பிடித்திருந்ததை மட்டும் பகிரபோகிறேன்.
நிரவ் ஷா - இவரின் ஒளிப்பதிவில் இயற்கை வளமும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அழகும் மிகையாகவே தெரிகின்றன... படத்தில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகு, அவ்வளவு நேர்த்தி மற்றும் துல்லியம், நம்மை முதலில் படத்தை நோக்கி ஈர்க்க வைப்பது நிரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான்...
ஜி.வி. பிரகாஷ் - நாளுக்கு நாள் இசையில் இவரது முதிர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது, பின்னணி இசையில் இவரது பக்குவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை வரவைக்கிறது... விழிகளில் ஒரு வானவில் பாடலில் இசையில் கரையும் மனம் காட்சியமைபோடு சேர்ந்து முழுவதும் நனைகிறது...விக்ரம் - விக்ரமின் நடிப்பில் மற்றொரு பரிமாணம், டிரைலர் பார்க்கையில் சற்று மிகையாக நடித்திருபாரோ என்று தோன்றியது ஆனால் படத்தில் கிருஷ்ணா என்னும் பாத்திரம் நம் மனதிலும் பசைபோட்டு ஒட்டிக்கொண்டதில் விக்ரமின் பங்கு அலாதியோ அலாதி... மூளை வளர்ச்சி குன்றிய கதாபாத்திரம் என்றாலே அந்த கதாபாத்திரத்தின் மேல் அனுதாபம் வருவதுபோல்தான் எல்லா படங்களிலும் பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தில் அனுதாபத்தோடு அன்பும் இயல்பாவே தோன்றிவிடுகிறது... விக்ரமை தவிர யாராலும் இவ்வளவு செம்மையாய் இதனை செய்திருக்க இயலாது...அனுஷ்கா - தமிழில் எல்லா படங்களிலும் கவர்ச்சியாக மட்டுமே வலம் வந்த அனுஷ்கா ஏற்கனவே அருந்ததியில் அவரது நடிப்பின் உச்சத்தை காட்டி அசத்தியவர்... இந்த படத்தில் முதல் பாதியில் கொஞ்ச நேரம் மட்டுமே வந்தாலும் இரண்டாம் பாதி இவரை வைத்துதான் நகர்கிறது... அனுஷ்கா அழகிலும், நடிப்பிலும் சபாஷ் போட வைக்கிறார்...சந்தானம் - அதிக காட்சிகள் இல்லை, இருந்தாலும் வழக்கமான கலாய்ப்புகள்  இல்லாமல் இயல்பான நகைச்சுவை நன்றாக சிரிக்க வைக்கிறது...அமலாபால் - அதிக காட்சிகள் இல்லை.. குறை கூற எதுவும் இல்லை...நாசர் - எத்தனை வயதானாலும் நாசருக்கு நிகர் நாசரே...விஜய் - ஒரு அப்பா மகள் உறவை, உணர்வை இதைவிட யாரால் அழகாக சொல்லமுடியும்!!! ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதைவிட்டு நீங்கா இடம் பிடிக்கிறது... விஜய் நீங்கள் வருங்காலத்தில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பீர்கள் என்பது உறுதி....கடைசியாக விக்ரமின் குழந்தையாக வரும் குட்டி பாப்பா - எங்கேந்து பிடிசிங்க இவ்வளவு திறமையான குழந்தையை... படத்தில் எல்லாவற்றையும் விட நான் ரசித்து ரசித்து பார்த்தது அந்த குழந்தையைதான். அழகு, மழலை, நடிப்பு என பட்டையை கிளப்புகிறது அந்த குழந்தை... அதிலும் இறுதிக் காட்சியில் கண்களில் நீரோடு சந்தோசத்தையும், சோகத்தையும், இன்னும் பலபரிமாணங்களை காட்டும் அந்த குழந்தை... ஐயோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கியூட்...

படத்தில் அனைவர் மனதிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை நிற்பது நிலா... படம் பார்த்த ஒவ்வொரு பெண்ணும், பெண்ணை பெற்றவரும், பெண்குழந்தைக்கு எங்குவோரும், கட்டாயம் ஒரு துளி கண்ணீராவது சிந்தியிருப்பர்...

மொத்தத்தில் தெய்வத்திருமகள் இப்படி ஒரு மகள் நமக்கு கிடைக்குமா என எங்கவைக்கும் திருமகள்...

(...என்னுடைய நிலா என் தங்கைதான்...)

1 comment:

  1. குழந்தையின் நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

    ReplyDelete